Home உலகம் காலமாறு அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

காலமாறு அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காலமாறு அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியாம் பொக்ஸ்  (Liam Fox) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டாலும் சில காலங்களுக்கு தொடர்ந்தும் பிரித்தானியா, காலமாறு அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2022ம் ஆண்டு தேர்தல் வரையில் மட்டுமே இந்த இணக்கப்பாடு அமுலில் இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் செயன்முறை மிகவும் சுமூகமான முறையில் நடைபெற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More