173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவின் முன்னணி அரசியல்வாதிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவியை வகித்து வரும சன் ஷென்கை ( Sun Zhengcai) மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீனாவின் அதி உயர் அரசியல் பதவிகளில் ஒன்றில் ஷென்கை அமர்த்தப்படுவார் என எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் அவர்மீது ஒழுக்க மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love