தமிழ் பேசும் மாணவர்களின் கல்விவரலாற்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் யாழ் இந்துவின் பழையமாணவர்களினால் கடந்த 2015 தொடக்கம் இந் நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் வடமத்தியமாகாணங்களைச் சேர்ந்ததமிழ் மொழி மூல க.பொ.தசாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதபாடதேர்ச்சியைஉயர்த்தும் நோக்குடன் இத் திட்டம் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயர் தரம் கற்கும் வாய்ப்பில் கணிதபாடச் சித்தியின் முக்கியத்துவம், உயர் தரத்தில் கணித, விஞ்ஞானத் துறைகளில் மாணவர்களில் பங்கேற்றலை அதிகரித்தல் என்பன இலங்கையின் கல்விவரலாற்றில் எழுவினாக்களாக வெளிக் கிளம்பியுள்ளதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’என்றஆழ்ந்தபொருட் கோடலில், தமிழ் பேசும் மாணவர்களின் கல்விநிலை உன்னதமான நிலையை அடையவேண்டும் என்றசமூகப் பிரக்ஞையின் பால் யாழ் இந்துவின் மைந்தர்களின் தீவிரசிந்தனையின் வெளிப்பாடாகவே ‘Race for Education ‘நிகழ்ச்சித் திட்டம் பரிணமித்துள்ளது.
கடந்த 2016 க.பொ.தசாதாரணதரபரீட்சைபெறுபேறுகளின்படி இலங்கையிலுள்ள 98 கல்விவலயங்களில் க.பொ.தஉயர் தரத்தில் கற்கதகுதிபெற்றமாணவர்களின் வலயமட்டத் தரப்படுத்தலில் இறுதி நிலையில் பலதமிழ்க் கல்வி வலயங்களே காணப்படுகின்றமை மிகவும் கவலைதரும் விடயமாகதொடர்ந்தும் உள்ளது. இதற்குஅடிப்படைக் காரணமாக இருப்பது கணிதபாடத் துறையின் வீழ்ச்சியேஆகும்.
இந்தவகையில் 2016 க.பொ.தசாதாரணதரகணிதபாடபெறுபேறுகளின் படி இச் செயற்றிட்டத்தின் இலக்குக் குழுவானசித்திக்கு இடர்ப்பட்டமாணவர்களில் வடக்கில் 1667 பேரில் 765 பேரும் (46மூ),கிழக்கில் 3699 பேரில் 1831 பேரும் (49மூ), மத்தியில் 2801 பேரில் 1567 பேரும் (56மூ) சித்தியடைந்துள்ளனர். அதாவது க.பொ.தஉயர்தரத்துக்கு கணிதபாடச் சித்தியுடன் செல்வதற்கு ஜயத்துடன் இருந்தமாணவர்களில் இத்திட்டம் ஏறத்தாழ 50மூஆனோரைகரைசேர்த்திருக்கிறது.
2015 இல் கல்விக்கானஓட்டம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைகள்:
1. 10000 இலகுகணிதபாடகற்றற் செயலேடுகள் (‘ஏணி’) அச்சிடப்பட்டுவடக்கு,கிழக்கு,வடமத்திய,மலையகமாணவர்களுக்குவழங்கப்பட்டன.
2. மாணவர்களை இச் செயலேடுகள் மூலம் வழிப்படுத்திக் கற்பிப்பதற்காகவளவாளர்களுக்குகொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
இவற்றால் உள்வாங்கப்பட்டகல்விப் பிரதேசங்களில் கணிதபாடஅடைவுகள் உவப்பானநிலைமையில் பேணப்பட்டன.
2016 இல் கல்விக்கானஓட்டம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைகள்
1. கடந்த 2015 தரம் 10 இல் தவணை 3இல் கணிதபாத்தில் 11- 40 வரையானபுள்ளிகளைப் பெற்றமாணவர்கள் இலக்குக் குழுவாக இனங்காணப்பட்டனர்.
2. 7000 இலக்குக் குழு மாணவர்களில் (300 பாடசாலைகள்) வடக்குமாகாணத்தைச் சேர்ந்த 1660 மாணவர்களுக்கு (128 பாடசாலைகள்) மேலதிகபயிற்சிவகுப்புக்களைநடாத்துவதற்குநிதிஒதுக்கீடுசெய்யப்பட்டது. ஏனைய கிழக்கின் மட்டக்களப்பு,மட்டக்களப்புமேற்கு,கல்குடா,பட்டிருப்பு, மூதூர் கல்விவலயங்களைச் சேர்ந்தமற்றும் காரைதீவு,மன்னம்பிட்டிய,நீர்கொழும்பு போன்றவற்றிலுள்ள தமிழ் பேசும் மாணவர்களுக்கு ‘இந்துவிழி’ எனும் பெயரில் 2 கையேடுகள் அச்சிடப்பட்டுவழங்கப்பட்டன. இதில் முதலாவதுநூல் அடிப்படைகணித எண்ணக்கருக்களை துரிதமீட்டல் செய்வதற்கும் இரண்டாவதுநூல் மாதிரி வினாத்தாள்களை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
3. மாதிரிப் பரீட்சைஒன்றுநடாத்தப்பட்டது.
4. வழிகாட்டல் வகுப்புக்கள் நடாத்தப்பட்டது.விளைதிறனைஅதிகரிப்பதற்குகல்விப்புலஆளணியினருடன் இணைந்துகண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
5. கிழக்குமாகாணத்தின் 4 கல்விவலயங்களைச் சேர்ந்தவழிகாட்டல் வகுப்புக்களைச் செய்தவளவாளர்களுக்குஊக்சூவிப்புபணம் வழங்கப்பட்டது.
6. மத்திய மாகாண வளவாளர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
2016 இல் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்ட அனுபங்களினடிப்படையிலும், கல்விப் புலம் சார்ந்தோரின் பாராட்டுதல்களுடனானபாரியஆதரவுடனும் இவ்வருடமும் (2017) இச் செயற்றிட்டத்தினை மேற்கொள்ள ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்விக்கானஓட்டம் நிகழ்ச்சித் திட்டத்திற்கானநிதியீட்டம்
ஐக்கிய இராச்சியம்,கனடா,அவுஸ்திரேலியாமற்றும் இலங்கையிலுள்ளயாழ் இந்துக் கல்லூரிபழையமாணவர்களுடன்,புலம் பெயர் தமிழ் உறவுகள்,நலன் விரும்பிகள்,சேவைநிறுவனங்கள் என்பனகைகோர்த்து இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கானநிதியீட்டத்திற்காய்ப் பங்காற்றுகின்றன. குறிப்பாகயாழ் இந்துவின் 1992ம் ஆண்டுபழையமாணவர்கள் ஒன்றாகி இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கானமுன்னெடுப்பாளர்களாகபணியாற்றிவருகின்றனர்.
தற்போது இந் நிதியீட்டத்தினைஅதிகரிப்பதற்காக ஜூலை 29ந் திகதியன்றுலண்டன்,மெல்போர்ண்,ரொறன்டோஆகியநகரங்களில் மரதன் ஓட்டநிகழ்வுஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான திரட்டப்படள்ளது. இதற்காகா http://www.virginmoneygiving.com/team/jhcoldboys.com எனும் இணையத்தளத்தினூடாகவெளிப்படைத் தன்மையுடையதானநிதியீட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாணத்திலும்கல்விக்கானநடைபவனி
கல்விக்கானநடைபவனி,யாழ் இந்துக் கல்லூரியின் பழையமாணவர்கள்,கல்லூரியின் அதிபர்,மாணவர்கள்,மற்றும் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன்எதிர்வரும்ஜூலை 29ந் திகதியன்றுயாழ் இந்துக் கல்லூரிமைதானத்தில் காலை 7.30க்கு நடைபவனியைஆரம்பித்துயாழ் நகரினூடாகமீண்டும் பாடசாலைமைதானத்தை 9.30 மணிக்குவந்தடையத் திட்மிடப்பட்டுள்ளது. இந் நடைபவனிகல்விமீதானவிழிப்புணர்வைஅனைவரித்திடத்தும் ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இத் திட்டம் தொடர்பான இற்றைப்படுத்தல்களுக்கு பேஸ்புக்கில் சுயஉந கழச நுனரஉயவழைn- டில-துர்ஊ-ழுடன டிழலளஎனும் பக்கத்திலும்,இணையத் தளத்தில் http://www.rfe.jhc92.com எனும் முகவரியிலும் பார்வையிடதிட்டஏற்பாட்டாளர்கள் வழி சமைத்துள்ளனர்.
போர் கொடுத்தவலிகளிலிருந்தும்,வறுமையின் பிடியிலிருந்தும் மீண்டுவரமுயற்சித்துக் கொண்டிருக்கும் எமதுஉறவுகளின் கல்விக்காய் அனைவரும் ‘கல்விக்கானஓட்டத்தில்’பங்கெடுப்போம் வாரீர் !!