178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றம் இழைத்தவர்களை ஜனாதிபதி ஆணைக்குழு பாதுகாக்காது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் எவரையும் பாதுகாக்க முயற்சிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் முன்வந்து, ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்ய அரசாங்கம் ஒரு போதும் திட்டமிடவில்லை எனவும், குத்தகைக்கு வழங்கவே முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love