விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன்


இந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக பதவி வகித்த  ரவி சாஸ்திரி தற்போது  அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுனில் சுப்பிரமணியன் இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 12 பேரிடம் நடைபெற்ற நேர்முக தேர்வுக்கு பின்னர் இவர் தேர்வாகியுள்ளார்.

சுனில் சுப்பிரமணியன், இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக ஒரு வருடம்  பதவி; வகிப்பார்.    74 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள  சுனில் சுப்பிரமணியன் 285 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன்  ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு தலைவராக  செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply