குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மீளவும் நாட்டில் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி பிரதிக் காவல்துறை மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தலைமையிலான விசேட பிரிவு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த செயற்திறன் மிக்க காவல்துறை அதிகாரிகள் இந்த குழுவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விசேட பிரிவு காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரைக் கொண்டமைந்துள்ளது.