குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா விவகாரம் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புப் பேரவையை கூட்டுவதில் எவ்வித அர்த்தமும் கடையாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரிய ஏவுகணை பரிசோதனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் பேச்சுவார்த்தை நடத்துவதனால் எவ்வித விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
மாறாக, இவ்வாறான கூட்டங்களின் ஊடாக சர்வதேச சமூகம் வடகொரியாவிற்கு சவால் விட விரும்பவில்லை என்ற செய்தியே வடகொரியாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி கலே ( Nikki Haley )தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பேரவையில் வடகொரியா தொடர்பில் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வித அர்த்தமும் அற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.