இலங்கை

ரவி கருணாநாயக்க பதவியை பதவி விலக வேண்டும் – தயாசிறி ஜயசேகர


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது பதவி விலக வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி குறித்த விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அவர் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு தாம் ஆதரரவளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என  குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க ஓர் கனவான் என்றால்  அவர் பதவி விலகிருக்க வேண்டுமென  வலியுறுத்தியுள்ள அவர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை பூர்த்தியாகும் வரையில் குறைந்தபட்சம் ரவி கருணாநாயக்க தனது பதவ விலக  செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply