Home இலங்கைவரட்சி நாட்டின் நெற்செய்கையை பாரியளவில் பாதிக்கும் – பிரதமர்

வரட்சி நாட்டின் நெற்செய்கையை பாரியளவில் பாதிக்கும் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வரட்சி நாட்டின் நெற்செய்கையை பாரியளவில் பாதிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நிலவி வரும் வரட்சியினால் நெற் செய்கை அரைவாசியினால் வீழ்ச்சியடையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரட்சியானது ஒட்டு மொத்த நாட்டுக்கும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் நெல்  அறுவடையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டால்  அது அரிசி ஆலைகளை மூடுவதற்கு வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய மல்வத்து ஓயா திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More