குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அரச படையினர் பொதுமக்களின் காணிகளை விடுவித்தமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு மேலும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்கள் மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் உண்மையைக் கண்டறியவது தேசிய ரீதியிலும் படையினருக்கும் தனிப்பட்ட ரீதியிலும் நன்மை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்பன தேசிய ரீதியில் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.