குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கனேடிய உயரம் பாய்தல் சம்பியன் டிரக் ட்ரவுன் ( Derek Drouin )உபாதையிலிருந்து குணமடைந்து வருகின்றார். இதனால் பிரித்தானியாவின் லண்டனில் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டித் தொடரில் அவர் பங்கேற்க உள்ளார்.
தடகள உலக சம்பியன்சிப் போட்டித் தொடரில் உயரம் பாய்தல் போட்டியில் ட்ரவுன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ட்ரவுன் கனேடிய தேசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் உபாதை காரணமாக பங்கேற்கவில்லை.
லண்டன் போட்டித் தொடரில் பங்கேற்று சிறந்த திறமைகளை வெளிப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


