அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ரஸ்யாவின் தலையீடு குறித்து அமெரிக்க புலனாய்வுத்துறையின முன்னாள் இயக்குனர் ரொபேர்ட் முல்லர் நடத்தி வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய தலையீடு தொடர்பான விவகாரத்தில் முல்லர், கிராண்ட் ஜூரி என்று அழைக்கப்படுகிற பெருநடுவர் குழுவை பயன்படுத்துகின்றார். இதன்மூலம் முல்லர், டிரம்ப் பிரசாரக் குழுவுடன் ரஸ்யாவின் கூட்டணியைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதில், ஒரு ஆரோக்கியமாக அணுகுமுறையை எடுத்துக்கொள்வார் எனக் காட்டுவதாக அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சாட்சியம் அளிப்பதற்கு மக்களை தூண்டுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க பெரு நடுவர்கள் குழு பயன்படுத்தப்படுவது உண்டு என்பதனால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இதேவேளை பெருநடுவர் குழு விவகாரங்கள், ரகசியமானவை எனவும் முல்லருக்கு வெள்ளை மாளிகை முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி கொண்டுள்ளது எனவும் ரஸ்ய விவகாரத்தில் பெரு நடுவர்கள் குழு பயன்படுத்தப்படுவது பற்றி அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு சட்ட ஆலோசகர் டி காப் தெரிவித்துள்ளார்.