குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முரண்பாடுகளை அகற்றி மக்களுக்கு சேவையாற்ற நாம் தயாராக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று மாலை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் , முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித்தலைவர்களும், இணைந்து தமிழ்மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிவு அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன.
அத்துடன் அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது என்பதுடன் அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்த மட்டில் அங்கத்துவக்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்னமும் மாகாண சபையின் காலம் முடிவடைய ஒரு வருட காலமே இருப்பதனால் அந்த கால பகுதிக்குள் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க எங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை அகற்றி சேவையாற்ற உள்ளோம்.
இன்றைய சந்திப்புக்கு சுரேஷ் பிரேமசந்திரன் வரமாட்டார் எனும் நிலையில் தான் இருந்தார். நான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் வந்திருந்தார்.
அத்துடன் இன்றைய சந்திப்பில் ரெலோ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் செல்வம் , புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று இனிவரும் காலத்திலும் இதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சித்தலைவர்கள் குறுகிய காலத்திற்கு ஒரு தடவை சந்திப்புகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2 comments
உங்கட முறன்பாடுகள் ஒருக்காலும் முடிவைடயாது தேர்தல் வர ஒற்று மய காட்டுவியள் வென்ற பிறகு அளுக்காள் பிரிந்து எல்லாத்தயும் அனுபவித்து ஏப்பவிட்டுவிட்டு திருப்பவும் ஒன்று சேருவியள். ஊடகங்களும் உங்கள் பிரச்சனைகளையும் ஊளல்களையும் ஊதித்தள்ளியே காலம் ேபாய்விடும். இதைத்தான் அரசாங்கம் சாதகமாக பயன் படுத்தி நரி லேலை செய்கிறார்கள். மக்களே மாற்றம் தேவை…
மேற்காணப்படும், siva, August 7, 2017 at 11:00 am திகதியிடப்பட்ட குறித்த விமர்சனத்துக்குச் சொந்தக்காரன் நானல்ல. இவ்வூடகத்துக்குப் பொறுப்பானவர்கள் இவ்விடயம் குறித்து உரிய கவனமெடுத்துத் தவறைச் சரிப்படுத்துவார்களென நம்புகின்றேன்.
நன்றி.