இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை பெற்றவர்களின் விடுதலை மனு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுக்கொண்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரொபட் பயாஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தாங்கள் சிறையில் இருந்த காலம் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதனால் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், நல்லொழுக்கத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படும் நடவடிக்கையின் பிரகாரம் தமிமை விடுவிக்கும்படி கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றில் நிலுவையில் இருந்து வருகின்ற நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த வழக்கில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை எதிர்வரும் 16ம்திகதிக்கு ஒத்திவைத்தனர்.