235
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேபாளத்தில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒதுக்கப்படுவதற்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பெண்களை இவ்வாறு கொடுமைப்படுத்துவோருக்கு எதிராக மூன்று மாத கால சிறைத்தண்டனையும் 30 டொலர் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலவந்தமான முறையில் வீட்டை விட்டு வெளியே அகற்றி கூடாரங்களில் தங்க வைக்கப்படும் ஒர் முறைமை நேபாளத்தில் காணப்படுகின்றது.
இவ்வாறு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட இரண்டு பெண்கள் அண்மையில் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் இந்த சட்டம் கடுமையான அடிப்படையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love