இலங்கை

பாராளுமன்ற ஒழுக்கத்தை மீறியோர் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்

பாராளுமன்ற ஒழுக்கத்தை மீறியோர் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமென   கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று   கூடியபோது  பாராளுமன்ற  சிறப்புரிமைகள் தொடர்பில் உரையாற்றிய பிரதியமைச்சர் அஜித் பெரேரா, கடந்த யூலை  28ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  நடந்து கொண்டமை குறித்து உரையாற்றினார்.

குறிப்பாக,   பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்தமை,  குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர்   பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்தமை,  போன்றவற்றினை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில்  பதிலளித்த சபாநாயகர் இவ்விடயம்  தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply