இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நில நடுக்கத்தினை இலங்கையில் கரையோர மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சுமத்ரா தீவின் பெங்குளுரில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் இது ரிக்டர் அளவு கோளில் 6.4ஆக பதிவாகியிருந்தது.
நில நடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டமை தொடர்பில் விடுக்கப்பட்ட சாதாரணமாக அறிவிப்பு மாத்திரமே இது எனவும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதுபற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.