176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
80 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
80க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் இதனைத் தெரிவித்துள்ள பிரதமர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love