வடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் அவர்கள் மக்களுடைய காணிகளையும் கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் பயன்படுத்தி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலேய் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவத்தினர் தெற்கிலிருந்து மீனவர்களை அழைத்து வருவதுடன் அந்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர் எனவும் அது தொடர்பில் வட மாகாண மீனவ சமுதாயத்தினர் அச்சமடைந்து காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவில் விதிமுறைகளை மீறிய காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம்களுக்காக வீதிகளும் வீடுகளும் அமைக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.