குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இணைய தேடுதள உலகின் ஜாம்பவானாக போற்றப்படும் கூகுள் நிறுவனத்தின் ஸ்பீச் ரெகக்னைசேன் (Speech Recognition Technology) தொழில்நுட்பத்திற்குள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஏதேனும் ஓர் விடயத்தை பற்றி தேடுதவற்கு அந்த விடயத்தை டைப் செய்து தேடுமாறு பணிப்பதன் மூலம் அந்த விபரங்களை கூகுள் தேடுதளத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
அதன் அடுத்த கட்ட பரிமாணமாக டைப் செய்யாது, விடயத்தைப் பற்றி சொல்வதன் மூலம் அதனை சொற்களை புரிந்து கொண்டு விபரங்களை வழங்கும் முறையே இந்த ஸ்பீச் ரெகக்னைசேசன் முறையாகும்.
இந்த முறையின் கீழ் இதுவரையில் உலகின் 119 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளும் இந்த தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளன.