Home உலகம் அவுஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பர்தா அணிந்து சென்றமைக்கு கடுமையான கண்டனம்:-

அவுஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பர்தா அணிந்து சென்றமைக்கு கடுமையான கண்டனம்:-

by admin

அவுஸ்ரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பவுலின் ஹன்சன் பர்தா அணிந்து சென்று பிற உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவரான பவுலின் அந்த நாட்டு நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றுகிறார். இந்த கட்சி அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா என்று அழைக்கப்படுகிற முகத்திரை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், பவுலின் ஹன்சன் பாராளுமன்ற செனட் சபைக்கு பர்தா அணிந்து சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பர்தா அணிந்து சென்ற அவர் தனது வழக்கமான இருக்கையில் அமர்ந்தபோது, அது பிற உறுப்பினர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பவுலின் ஹன்சன் செயலுக்கு ஆளும்கட்சி அமைச்சர் ஜோர்ஜ் பிராண்டிஸ், கண்டனம் தெரிவித்தார். குறிப்பாக, “ஹன்சனின் செயல், அவுஸ்ரேலியாவில் உள்ள 5 லட்சம் முஸ்லிம்களை அன்னியப்படுத்தி உள்ளது. அந்த சமுதாயத்தை ஒரு மூலையில் தள்ளி, அதன் மத அடிப்படையிலான உடையை கேலி செய்வது என்பது பயங்கரமான விஷயம். நீங்கள் செய்த இந்த செயலைப்பற்றி சற்று சிந்திக்க வேண்டும் என குறிப்பட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பர்தாவுக்கு தடை விதிக்கப்படமாட்டாது என ஜோர்ஜ் பிராண்டிஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அங்கு நிலவிய கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஹன்சன், பர்தாவை அகற்றினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More