179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நாளை பதவி விலகவுள்ளார். பௌத்த சாசன அமைச்சில் நாளைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கூட்டி அதில் தனது பதவி விலகலைப் பற்றி அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையை நீதி அமைச்சர் பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விஜயதாச ராஜபக்ஸ பதவி விலகினால் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love