Home இலங்கைஇலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கலந்துரையாடல்

இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கலந்துரையாடல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை (SLTES) க்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த, தொழில் சார் பாடங்களுக்கு விண்ணப்பித்து முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு கல்வியியலில் முதல் பட்டம் இல்லை எனத் தெரிவித்து  இரண்டாவது நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாது பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது

எதிர்வரும் 22ம் திகதி   செவ்வாய்கிழமை  மு.ப 9.00 மணிக்கு  யாழ்ப்பாணம்  இந்து ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக உள்ள ‘எடிசன் அக்கடமி’ இல் நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின்   கலந்து கொள்ளவுள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பாதிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டு  இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய ஒத்துழைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More