150
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.
37 வயதான கிறிஸ் கெய்ல் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். குறித்த போட்டியானது செப்டம்பர் 19ம் திகதி முதல் 29ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love