குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்தை இலங்கை முழு அளவில் அமுல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழு அளவில் அமுல்படுத்த வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் கிடையாது என தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குதல் மற்றும் காயங்களை ஆற்றுதல் என்பன மிகவும் அவசியமானவை என சுட்டிக்காட்டியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு புறம்பான விடயங்களை சர்வதேச சமூகமோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களோ ஏற்றுக் கொள்ள தயாரில்லை என தெரிவித்துள்ளது.