குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இத்தாலியின் இஸ்சியா தீவில் ஏற்பட்ட நில அதிர்வின் இடிபாடுகளுக்கு சிக்கிய மூன்று சகோதரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் சுற்றுலா தளங்களில் ஒன்றான இஸ்சியா தீவில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.
மூன்று சகோதரர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நில அதிர்வில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதுடன் 39 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
11 வயதான சிறுவன் நில அதிர்வினை உணர்ந்தவுடன் தனது 7 மாத 8 வயது சகோதரர்களை கட்டிலுக்கு அடியில் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளார்.
இதன் காரணமாகவே மூன்று சகோதரர்களும் நில அதிர்வினால் ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து தப்பித்துள்ளனர். பீட்சா வாங்கித் தருகின்றேன் இப்போது கட்டிலுக்குள் செல்லு என 8 வயதான சகோதரனை 11 வயதான சிறுவன் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் அருகே இஸ்சியா தீவில் நிலநடுக்கம் – இருவர் உயிரிழப்பு
Aug 22, 2017 @ 04:22
இத்தாலியின் அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இஸ்சியா தீவின் முக்கிய பகுதியான காஸ்மிக்சிலோ உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் காரணமாக தேவாலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.