ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய பெல்ட் வெடிகுண்டு பற்றிய விசாரணையை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று பல்நோக்கு கண்காணிப்புக் குழு தாக்கல் செய்துள்ளது
ராஜீவ் கொலை வழக்கில் பெல்ட் வெடிகுண்டு மற்றும் கொலை சதி தொடர்பாக விசாரிக்க பல்நோக்கு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழு தொடர்ந்தும் விசாரணையை நடத்தி வருகின்ற நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின்; விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதன் போது பெல்ட் வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்பட்டது, என்பது தொடர்பான விசாரணை என்ன நிலையில் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்று இந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.