பாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அவர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நீதிமன்றத்துக்கு உள்ளே வைத்து ராம் ரஹிமுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றதையடுத்து, ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ற்போது ராணுவ மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் சிறையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது உறுதியான பின்னர் சிறைக்கு அனுப்பப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
தீர்ப்பையடுத்து ஹரியானாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இணையதள சேவையும் இம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்றைய தீர்ப்பு குர்மீத் ராம் ரஹிம் சிங்-குக்கு எதிராக அமைந்துவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் குதிப்பார்கள் என்பதனால் அவர்களை அடக்க போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தடியடி, கண்ணீர் புகை மற்றும் அதிகபட்சமாக துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆசிரமத்திலுள்ள இரு பெண்களை, குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத் தீர்ப்பு இன்று – ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் பதட்டம்:-
ug 25, 2017 @ 04:14
இன்று மதியம் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவருக்கெதிரான வழக்கு தொடர்பில் தீர்ப்பு வெளியாவுள்ள நிலையில் சண்டிகர் கிரிக்கெட் மைதானம் ஒரு பிரம்மாண்ட தாற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்களாக சண்டிகரிலுள்ள அத்தனை பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக உள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பர் ஆசிரமத்திலுள்ள இரு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1948 ஏப்ரல் 29 அன்று தொடங்கப்பட்ட சமூக நல -ஆன்மிக அமைப்புதான் தேரா சச்சா சவுதா. இந்த அமைப்புக்கு இன்று உலகெங்கும் 46 ஆச்சிரமங்கள் உள்ளன. மரம் நடுதல், ரத்த தானம், சுகாதார சூழல், ஆதரவற்றோருக்கு உதவி, பூர்வ இனக் குடியினருக்கும் திருநங்கைகளுக்கும் ஆதரவு என்ற மக்களிடையே தன் தொடர்பை அழுத்தமாகப் பதித்தது இந்த அமைப்பு.
குர்மீத் ராம் ரஹீம் சிங் அரசியல் செல்வாக்கு மிக்கவர். இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டவர். இவருடைய பல சமூகப் பணிகள் கின்னஸ் சாதனை நூலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று – அதிகம் பேருக்கு, இதய நோய்களைக் கண்டுபிடிக்க உதவும் எக்கோ சோதனை முகாம் நடத்தியது.
அத்துடன் ஒரு மருத்துவக் கல்லூரியை ஆறே நாட்களில், ஒரு கிரிக்கெட் மைதானத்தை 42 நாட்களில், 175 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை 17 நாட்களில் என்று மிகக் குறைந்த காலத்தில் இவர் கட்டி முடிக்க, ஒவ்வொன்றும் ஆசிய சாதனை ஆனது.
ஒரு கட்டத்தில் தன்னையே மனித ரூபத்தில் வந்த கடவுளாகச் சித்தரித்துக் கொண்ட இவர் ஐந்து சினிமாக்கள் எடுத்ததுடன் அதில், சில படங்களில் தன் மகளையும் சேர்த்துக் கொண்டார்.
2016-ல் தாதா சாஹேப் பால்கே விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இவர்தொடர்பில் அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் சந்யாசினி ஒருவர் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னைப்போல் மேலும் 35 பெண்களுக்கு இதேபோல் நடைபெற்றது எனவும் தெரிவித்திருந்தார்
இதைத் தொடர்ந்து சில மாதங்களில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடிதம் அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் இவர் இருந்திருப்பார் என்பதனாலேயே இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.
மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு நடத்தத் தீர்மானித்தது. இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. டி.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகியிருந்த 18 சந்யாசினிகளை விசாரித்தது சிபிஐ. அவர்களில் இருவர் தாங்களும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினர்.
ஆசிரமத்தில் நடக்கும் சட்டமீறலான விஷயங்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஓட்டுநராகப் பணியாற்றிய கட்டா சிங் என்பவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சாட்சியம் கொடுத்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளநிலையிலேயே இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக அமைந்தால் அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு என எதிர்பார்க்கப்படுகின்றது