குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அகதிகளை கிரேக்கத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அகதிகள் முதலில் காலடி எடுத்துவைத்த கிரேக்கத்திற்கு அவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திருப்பி அனுப்பவுள்ளன.
கிரேக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள போதிலும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன. ஐரோப்பிய ஓன்றிய நாடுகளில் இருந்து அகதிகள் மீள கிரேக்கத்திற்கு எந்த நேரத்திலும் வந்துசேரலாம் என கிரேக்கத்தின்குடிவரவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன எனவும் அகதிகள் அடுத்த மாதமளவில் திரும்பி வரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரேக்கம் ஏற்கனவே பெருமளவு அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அதேவேளை மேலும் அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு கிரேக்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்ட்டுள்ளது. இது அர்த்தமற்ற நடவடிக்கை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.