பாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை விவரம் அறிவிக்க சி.பி.ஐ. , தனிநீதிமன்றத்துக்கு நீதிபதி ஜெகதீப் சிங்கை பாதுகாப்பாக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அரியானா அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குர்மீத் ராம் ரகீம்சிங், குற்றவாளி என நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளையதினம் தண்டனை விவரம் வெளியிடப்படவுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து கலவரம் மூண்டதால், பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.எஸ். சாரோன் தலைமையில் முழு அமர்வு நேற்று விசாரணை இடம்பெற்றது.
இதன்போது குர்மீத்துக்கான தண்டனை விவரத்தினை அறிவிக்க, அவர் சிறைவைக்கப்பட்டுள்ள ரோடக் சிறையில் தற்காலிக நீதிமன்ற அறையினை உருவாக்கவும், நீதிபதியை பத்திரமாக வான்வழியில் அழைத்துச்செல்லவும், நீதிமன்ற ஊழியர்கள் 2 பேரை உடன் செல்லவும் நடவடிக்கை எடுக்குமாறும் அரியானா அரசுக்கு உத்தரவிட்டனர்.