Home விளையாட்டுஇலங்கை அணிக்கு எதிரான ஓருநாள் போட்டித் தொடரையும் கைப்பற்றியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான ஓருநாள் போட்டித் தொடரையும் கைப்பற்றியது இந்தியா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இந்தியா அணி கைப்பற்றியது. ஐந்து போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா இலகு வெற்றியீட்டியுள்ளது. கண்டி பல்லேகலே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி 217 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் லஹிரு திரிமான்னே 80 ஒட்டங்களைப் பெறுக்கொண்டார். பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோணி ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அகில தனன்ஜய 2 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியானதன் பின்னர் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் குழப்பம் விளைவித்து, இலங்கை அணிக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை மைதானத்திற்கு வீசி எறிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் போட்டி சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேல் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More