296
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
20ம் திருத்தச் சட்டம் காரணமாக மேல் மாகாணசபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாகாணசபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்தும் நோக்கில் 20ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் மேல் மாகாணசபையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தின் போது பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழப்ப நிலைமை காரணமாக அவை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, இதனால் எதிர்வரும் 4ம் திகதி வரையில் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க மேல் மாகாணசபையின் தவிசாளர் தீர்மானித்தார்.
Spread the love