குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் சில மணிநேரங்களில் பிரசல்ஸில் ஆரம்பமாகவுள்ளன. இந்தநிலையில் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த விவகாரங்களிற்கான பிரித்தானியாவின் செயலாளர் டேவிட் டேவிஸ் ஐரோப்பிய ஓன்றியம் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பாவை சேர்ந்த மக்களிற்கும் வர்த்தக சமூகத்தினரிற்கும் பரஸ்பர நன்மையளிக்க கூடிய உடன்பாடுகளை எட்டுவதே பிரித்தானியாவின் உறுதியான இலக்காக காணப்படுகின்றது என அவர் பேச்சுவார்த்தைகளில் வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
அதேவேளை ஐரோப்பிய ஓன்றியம் தனது பிரஜைகளின் உரிமை அயர்லாந்து எல்லை மற்றும் பிரித்தானியா தனது விவகாரத்திற்காக செலுத்தவேண்டிய கட்டணம் போன்ற விடயங்களை தீவிரமாக வலியுறுத்தி வருகின்றது
இதேவேளை இந்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இரு தரப்பும் ஏனைய தரப்பை குறைகூறி வருவதும்; குறிப்பிடத்க்கது