குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுக்களில் பிரித்தானியா நல்ல நிலையில் உள்ளதாக பிரதமர் தெரேசா மேயின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளில் நாங்கள் சிறந்த நிலையில் உள்ளதாக கருதுகின்றோம். எங்கள் எதிர்கால உறவுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்த பேச்சுவார்த்தைகளிற்குள் நுழைவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையிலான மூன்றாம் சுற்றுப்பேச்சுக்கள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவின் விவகாரத்து குறித்த விவகாரங்களிற்கு தீர்வு காணப்பட்ட பின்னரே ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான எதிர்கால வர்த்தக உறவுகள் குறித்த பேச்சுக்கள் சாத்தியமாகும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்- குளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.