குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தொழில் வாய்ப்பு வழங்கும் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூடுதலான தொழில் வாய்ப்பு வழங்கும் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் புதிய திட்டமொன்று அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது நாடு பாரியளவில் கடன் சுமையில் சிக்கியிருந்தது என சுட்டிக்காட்டியுள்ள அவர் எவ்வாறெனினும் தற்போது கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டளவில் கடன் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் 150,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும்; தெரிவித்துள்ளார்.