குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஈடுபட்டுள்ள அதிகாரி மைக்கல் பார்னியர் திங்கட்கிழமை ஆரம்பமான பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பினதும் நிலைப்பாடுகளில் பாரிய இடைவெளி காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அயர்லாந்து மற்றும் வடஅயர்லாந்திற்கு இடையிலான உறவுகள் குறித்து சில ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் ஓட்டுமொத்த பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிக்க கூடிய விதத்தில் அமைந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
2019 மார்ச் இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் தனது கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டிய தார்மீக பொறுப்பு தனக்குள்ளதாக பிரத்தானியா கருதவில்லை என்றும் ஐரோப்பிய ஓன்றிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நான் பொறுமையிழந்துள்ளேன் ஆனால் கோபப்படவில்லை உறுதியாகயிருக்கின்றேன் எனவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்