இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்க நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பு “வன்ஹார்ட்” என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. ஹொலிவுட் பாணியில் உருவான இந்த படம், நேற்று முன்தினம் மலேசியாவில் வெளியிடப்பட்டது. அங்கு சுமார் 20 ஆயிரம் பேர் திரைப்படத்தினை பார்த்துள்ளனர்.
அங்கு உரையாற்றிய ஏ.ஆர்.ரகுமான், தனது இசை அனுபவங்கள், வாழ்க்கை பற்றிய தன் புரிதல், தனது இசை குழுவினரின் அனுபவ பகிர்வு போன்றவற்றை கதை ஓட்டத்துடன் ஆத்மார்த்த சினிமாவாக பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது அறக்கட்டளையின் பெயரான வன்ஹார்ட் எனப் பெயரிப்பட்ட இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அந்த அறக்கட்டளைக்கே போகும் எனவும் இதன்மூலம் வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் ஏ .ஆர்.ரகுமான் குறிப்பிட்டார்.
ஹொலிவுட்டில் இசை கலைஞர்களின் கச்சேரியைப் படமாக எடுத்திருக்கிறார்கள் எனவும் மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ கான்சாட் திரைப்படம் புகழ் பெற்றது எனவும் அதுபோன்று எடுக்கப்பட்ட இந்த படத்தை இந்தியாவில் 8ம் திகதி வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பாடசாலைப் படிப்பை முடித்ததும் கல்லூரியில் சேராமல் இசை கலைஞரான போது எனது எதிர் காலத்தை நினைத்து பயந்ததாகவும் சுமார் 10 ஆண்டுகள் வரை இந்த பயம் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த படத்தை பார்ப்பவர்கள் இசை கலைஞர்களின் உலகத்துக்குள்ளே வந்துவிடுவார்கள் என்றும் படத்தை பார்த்த பலர் உணர்ச்சி பெருக்கில் அழுதுவிட்டனர் என்றும் ஏ.ஆர்.ரகுமான், நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளா