குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பார்க் முன்னாள் போராளிகள் புதிய கட்சியொன்றையும் அதற்கான சின்னமொன்றையும் உருவாக்கியுள்ளனர். கொலம்பியாவின் முன்னாள் ஆயுத குழுவான பார்க் ஆயுதக் குழுவினர் புதிய கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் அறிவித்துள்ளனர்.
ஆயுத போராட்டத்திலிருந்து பொது அரசியல் நடவடிக்கைகளுக்கு பார்க் ஆயுத குழுவினர் மாற்றமடைந்துள் நிலையில் இவ்வாறு கட்சியையும் சின்னத்தினையும் அறிவித்துள்ளனர். பார்க் ஆயுதக் குழுவின் கட்சி சின்னமாக ரோஜாப்பூ காணப்படுகின்றது. இந்த ஆயுதக் குழுவினர் கடந்த ஜூன் மாதம் ஆயுதங்களை களைந்திருந்தனர்.
பார்க் ஆயுதக் குழுவினர் கடந்த ஐந்து தசாப்தங்களாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Shalom Shtamberg, a 93-year old Holocaust survivor, is lifted on a chair during celebrations marking his bar mitzvah ceremony, a Jewish coming-of-age celebration traditionally marked by boys at the age of 13, in Haifa, Israel August 31, 2017. REUTERS/Amir Cohen