சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்கின்ற அசாதாரண சூழல் இவ்விதமாக தொடருவது தமக்கும் எவ்விதமான நன்மையும் அளிக்கப்போவதில்லை என்பதனை சிங்கள மக்கள் உணர்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த நாடு தற்போதைய நிலையில் இருந்து பொருளாதார ரீதியாக விடுவிக்கப்பட வேண்டுமாயின் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்த நாள் நினைவுகளுடான நினைவுப் பேருரையும் இலட்சிய இதயங்களோடு என்னும் கருப்பொருளிலான நூல் வெளியீடும் நேற்று யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.