மியான்மார் ராணுவத்தின் இனப்படுகொலையில் இருந்து தப்பி மலைகளில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் 30,000 பேர் உணவின்றி பட்டினியால் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஸை பூர்வீமாக கொண்டவர்கள் என குறிப்பிட்டு மியான்மர் பௌத்த பேரினவாதிகள் இனப்படுகொலையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்துடன் ராணுவ முகாம்களைத் தாக்கியதாக கூறி அந்நாட்டு ராணுவமும் கடந்த ஓகஸ்ட் முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தாக்குதலால் மேற்கொண்டு வருகின்றது. இதனால் மியான்மாரை விட்டு 90 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் தப்பி பங்களாதேசுக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் மேலும் மியான்மரை விட்டு தப்பிய 30,000 பேர் பங்களாதேசுக்கு அருகே உள்ள மலைகளில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் அவர்கள் உணவு கிடைக்காமல் குழந்தைகளுடன் பசியாலும் பட்டியானாலும் நோய்களாலும் பரிதவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.