குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கென்ய எதிர்க்கட்சித் தலைவர் றெய்லா ஒடின்கா ( Raila Odinga )தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் சாசன அடிப்படையிலும், சட்ட ரீதியிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் அறிவித்துள்ளார்.
பிழைகளை திருத்திக் கொள்ளும் வகையில் புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராய்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலை செல்லுபடியற்றது என அறிவித்திருந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒக்ரோபர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக மீளவும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் உஹிரு கென்யாட்டா ( Uhuru Kenyatta ) வெற்றியீட்டிருந்தார் என முன்னதாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.