குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு சரியானதே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சி கொண்டுள்ளது எனவும் இந்த நிலைப்பாடு சரியானது எனவும் அதனை தாம் எதிர்க்கவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ரத்தினபுரி கொலன்ன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.