சிரேஸ்ட பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியரான கௌரி லங்கேஷ் பெங்களூருவில் நேற்று மாலை அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சமூக அநீதிகளுக்கெராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர் என்பதுடன் மதசார்பினை கடுமையாக எதிர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை விருந்தினர் மாளிகை அருகே பத்திரிகையாளர்கள் போராட்டம் மேற்கொண்ட பத்திரிகையாளர்கள் , பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் கௌரியின் கொலையை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.