மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக, அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி முதல்முறையாக தெரிவித்துள்ள கருத்தில், தன்னுடைய அரசு ரக்கைன் மாநிலத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார்.ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ஆங் சான் சூச்சி கூறியுள்ளார்.
மியான்மாரில் பௌத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக ; ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதில் பலர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இதுவரை 87 ஆயிரம் பேர் மியான்மாரிலிருந்து பங்களாதேசுக்கு இடப்பெயர்ந்துள்ளதாக ஐ. நா. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் வன்முறை குறித்து இன்று ஆங் சான் சூகி வெளியிட்ட அறிக்கையில், மியான்மார் நெருக்கடி குறித்து தவறாக புகைப்படங்கள், தவறான தகவல்கள் பரப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் இங்குள்ள சமூகத்தினரிடம் பொய்யான தகவலை பரப்பி பிரச்சினையை ஏற்படுத்துக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.