இந்திய முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேற்றையதினம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. பதவியில் இருந்த காலத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை விதிகளை மீறி ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கு தொடர்பில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்டின் சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரந்தா வனப்பகுதி நிலத்தில் சுரங்கம் தோண்ட 2012ஆம் ஆண்டின் வனப்பாதுகாப்புச் சட்டங்களை மீறி எலெக்ட்ரோ ஸ்டீல் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி சோதனை இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் 2011ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக பதவிவகித்த அவர் 2013ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.