191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி மிகவும் பாரதூரமானது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டை விடவும், மத்திய வங்கி பிணை முறி மோசடி பாரதூரமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டாலும் டிலான் பெரேரா அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love