அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு-
பதவி உயர்வில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தங்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒன்றாக இணைந்து இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: போர் முனையிலும் எல்லைப் பகுதியிலும் பணிகளில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகளைப் போலவே, அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளும் அந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.போர் முனையில் இருக்கும் அதிகாரிகள் சந்திக்கும் அதே சவால்களை அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளும் சந்திக்கின்றனர் எனவும் ஆனால், பதவி உயர்வில் அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுகின்றதென மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ராணுவத்தின் அனைத்துப் பிரிவினரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனவும் அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளை அவசர, அவசிய காலத்தில் மட்டுமே போரிடும் பகுதிகளில் நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ராணுவ அலுவலகப் பிரிவுகளில் பணியாற்றி வருகின்ற நிலையில் குறித்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.