குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மியன்மார் நாட்டின் பிரஜைகளுக்கு சுற்றுலா அடிப்படையில் வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரோஹினியா முஸ்லிம்கள் அடைக்கலம் கோரி நாடுகளில் தஞ்சம் புகும் காரணத்தினால் இவ்வாறு வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் இடம்பெற்று வரும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார். ரோஹினிய முஸ்லிம்கள் சுற்றுலாப் பயணிகள் என்ற அடிப்படையில் இலங்கைக்குள் பிரவேசித்து இங்கு புகலிடம் கோரப்படும் என்ற காரணத்தினால் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்க்பபட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.