விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயத்தின் லீவிஸ் ஹமில்டன் தொடர்ந்தும் முதலிடம் :


பார்முலா1 கார்பந்தயத்தில் இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் சம்பியனாவதற்கான  வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன்   263 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும்  20 சுற்றுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்  14-வது சுற்று சிங்கப்பூர் கிராண்ட்பிரியிலுள்ள மரினா ஓடுதளத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் 306.72 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 பேர் பங்குபற்றினர்.
இந்த நிலையில்  முன்னாள் சம்பியனான  ஹமில்டன்  2 மணி 03 நிமிடத்தில  இலக்கை அடைந்து, முதலிடத்தை பிடித்துள்ளார்;.  இதன் மூலம் அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்துள்ளது.  இந்த சீசனில் அவர் பதிவு செய்த 7வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் சம்பியன்  பட்டத்திற்கான வாய்ப்பில் ஹமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெட்டல் 235 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி  மலேசியாவில் நடைபெறவுள்ளது

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.