குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தீவிரவாத உள்ளடக்கங்களை கொண்ட விடயங்களை அகற்றுவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைந்து செயற்படவேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐக்கியநாடுகள் சபையில் வலியுறுத்தவுள்ளார். சமூகஊடகங்கள் தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பொன்றிற்கு பிரித்தானிய பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக தொழி;ல்நுட்ப நிறுவனங்களும் சமூக ஊடகங்களும் ஆற்றவேண்டிய பங்களிப்பு குறி;த்து அவர் வலியுறுத்துவார். பயங்கரவாதிகள் தொடர்புபட்ட விடயங்களை இனம்கண்டு இரண்டு மணித்தியாலத்திற்குள் நீக்கவேண்டும் என அவர் வலியுறுத்தவுள்ளார்.
இணையங்களை பயங்கரவாதிகள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என தெரேசா மே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஐக்கியநாடுகள் சபையில் ஆற்றவுள்ள உரையில் இதுவரையில் இந்த விடயத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாதித்துள்ள விடயங்களை பிரதமர் பாராட்டவுள்ளார் என்றபோதிலும் அவர்கள் வேகமாகசெயற்படவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தவுள்ளார்.
இதேவேளை ஏனைய ஐரோப்பிய ஓன்றிய நாடுகளும் பிரித்தானிய பிரதமரின் இந்த வேண்டுகோளிற்கு ஆதரவாக கருத்து வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கூகுள் நிறுவனம் தங்களால் தனித்து இதனை மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்கங்கள் மற்றும் மக்களினது ஆதரவு அவசியம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.